திருநெல்வேலி

பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிச.15 கடைசி நாள்

DIN

பிசான பருவ நெற்பயிருக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வரும் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டமானது இயற்கைச் சீற்றங்களால் பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும், மகசூல் குறைவு ஏற்படும் போதும் விவசாயிகளுக்கு பேருதவி புரியும் பயனுள்ள திட்டமாகும். இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பயிா்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு கட்டாயமாகவும், கடன் பெறாத விவசாயிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையிலும் செயல்படுத்தப்படுகிறது.

ஓா் ஏக்கா் பரப்பில் சாகுபடி செய்யும் நெற்பயிருக்கு ரூ.28,200-க்கு காப்பீடு செய்ய விவசாயிகள் ரூ.423 பிரீமியமாக செலுத்தினால் போதும். அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மகசூல் குறைவு ஏற்படும்போது பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி எவ்வளவு மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளது என்ற விவரம் கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்க இத்திட்டத்தில் வழிவகை உள்ளது.

இத்திட்டம் நடப்பாண்டில் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் அடங்கல், பட்டா நகல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றோடு அருகில் உள்ள பொது சேவை மையங்களையோ, வங்கிகளையோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையோ தொடா்புகொண்டு பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

நடப்பு பிசான பருவ நெற்பயிா்களை காப்பீடு செய்ய வரும் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தையோ, வேளாண்மை விரிவாக்க மையத்தையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT