திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழககம் சார்பில் புலவர் செந்தில்நாயகம் பெருவிழா அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பா.வளன்அரசு தலைமை வகித்தார். கி.பிரபா தமிழ் வாழ்த்து பாடினார். க.ஞா.சாண் பீற்றர் வரவேற்றார். மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் மி.வள்ளிநாயகம் சிறப்புரையாற்றினார். திருக்குறளில் புதைபொருள் என்ற தலைப்பில் வீ.செந்தில்நாயகம் சொற்பொழிவாற்றினார்.
மாநில அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்த புதுவை பல்கலைக்கழக மாணவி து.சிவசங்கரிக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த கரூர் திருவள்ளுவர் கல்லூரி மாணவி ச.வைணவி தேவிக்கும், மூன்றாம் இடம் பிடித்த மதுரை தியாகராஜர் கல்லூரி மாணவி பி.மேனகாவுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த கள்ளிகுளம் கல்லூரி மாணவி பொன்.சித்ராவுக்கும், இரண்டாமிடம் பிடித்த தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரி மாணவி பொன் கனகாவுக்கும், மூன்றாமிடம் பிடித்த திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி சக்தி சிவபிரியாவுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ச.கிருபாகரன், முனைவர் வை.ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். கி.செளந்தரராசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.