திருநெல்வேலி

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது 

DIN

தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலர் பி. குருசாமி தலைமை வகித்தார். நகர துணைச் செயலர்கள் பா. கணேசன், இ. ஸ்டாலின்,  நகரப் பொருளாளர் வீ. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜி. கதிரேசன், கு. பிச்சமணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.  
இதில், விவசாய சங்கத் தலைவர் ஏ. கருப்பையா, ஏஐடியூசி வாடகை கார் ஓட்டுநர் சங்கச் செயலர் ஜி. வேல்முருகன், நகர செயற்குழு உறுப்பினர் கா. ஜோதிராமலிங்கம், குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் ப. வேலுசாமி, கட்டுமான சங்கச் செயலர் வேலுச்சாமி, ஏஐஒய்எஃப் மாவட்டக் குழு உறுப்பினர் பி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோல், ராயகிரியில் நகரச் செயலர் சமுத்திரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் பொன்னுச்சாமி, இசக்கித்துரை, ஆர். சமுத்திரக்கனி, சொரிமுத்து உள்ளிட்டோரும், வாசுதேவநல்லூரில் ஒன்றியச் செயலர் எம். தங்கவேலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜன், முருகன் உள்ளிட்டோரும், தேவிபட்டணத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பி. சிங்காரவேலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஏசையா, இன்னாசிமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
களக்காடு: களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் என். முத்துவேல் தலைமை வகித்தார். அயூப்கான் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார்,  நான்குனேரி வட்டக் குழுச் செயலர் க. முருகன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் ஆ. பாலசுந்தரம், துணைச் செயலர் பால்ராஜ், கிளைக் குழு நிர்வாகிகள் சுப்பையா, நாதன்,  நம்பிராஜன்,  பாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
நான்குனேரி தொழில்நுட்ப பூங்கா திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். உப்பாறு, நான்குனேரியன் கால்வாய் உள்ளிட்டவற்றை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT