திருநெல்வேலி

திசையன்விளையில் இளைஞர் மீது தாக்குதல்

திசையன்விளையில் இளைஞரை தாக்கியதாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

திசையன்விளையில் இளைஞரை தாக்கியதாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திசையன்விளை, கக்கன் நகரைச் சேர்ந்தவர்கள் முருகன் மகன் பிரகாஷ் (27), செல்வன் மகன் மதன் (22), பெருமாள் மகன்கள் மதி (25), மருது (23), பன்னீர் மகன் முதல்வன் (22. நண்பர்களான இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது,  பிரகாஷுக்கும், மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், பிரகாஷ் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT