திருநெல்வேலி

களக்காடு மலைப் பகுதியில் 2ஆவது நாளாக தீ: வனத் துறையினர் திணறல்

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை பற்றிய தீ, 2ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து பரவி எரிந்து வருகிறது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத் துறையினர் திணறி வருகின்றனர்.
களக்காடு புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பத்மனேரி காவல்சரகத்தில் உள்ள வெள்ளிமலை - கீரைக்காரன்தொண்டு மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை தீப்பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து, வியாழக்கிழமை தீ பரவிய காட்டுப் பகுதிக்கு 50-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகமாக இருப்பதாலும், காற்றின் வேகம் காரணமாகவும் தீ மேலும் பரவி எரிகிறது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் வனத் துறையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, வனத் துறையினருடன் கிராம வனக் குழுவினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிக்காக காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளதாகவும், காட்டுத் தீயில் சுக்குநாறிப் புல் மட்டுமே எரிந்து நாசமானதாகவும், வன உயிரினங்களுக்கோ, பெரிய வகையிலான மரங்களுக்கோ பெரிய அளவுக்கு ஆபத்து இல்லை எனவும் வனச்சரகர் புகழேந்தி தெரிவித்தார்.
கடும் வறட்சி காரணமாக ஏற்கனவே கருகிய நிலையில் காணப்படும் வனப் பகுதி தற்போது தீக்கிரையாகி வருவதால் தீயைக் கட்டுப்படுத்தி அணைப்பதில் வனத் துறையினர் திணறி வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே தீ முற்றிலுமாக அணையும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT