திருநெல்வேலி

சொக்கம்பட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்

கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனாகிய ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி

DIN

கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் உடனாகிய ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜூன் 10ஆம் தேதி ஸ்ரீ சொக்கலிங்க விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் பல்வேறு பூஜைகள், யாகசாலை வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜையும் , 8.31 மணிக்கு சுவாமி- ,அம்பாள் பரிவார மூர்த்திகள் மற்றும் ராஜகோபுரத்திற்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றன. 
இதில், கோயில் செயல் அலுவலர் சதீஷ் , இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கண்ணன், கோயில் எழுத்தர் குமார், விழா குழுவைச் சேர்ந்த வேலுச்சாமி பாண்டியன், முத்துப்பாண்டியன், செல்வம், சந்தன பாண்டியன், மகாலிங்கம், முத்துக்குமார் ,சடையப்பன் மற்றும் அனைத்துச் சமுதாயத் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT