திருநெல்வேலி

புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் தேரோட்டம்

புளியங்குடி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

புளியங்குடி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. 10ஆம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 8 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. 
பாலாஜி கிரானைட்ஸ் நிறுவனர் சங்கரநாராயணன், புளியங்குடி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், கோயில் நிர்வாக அதிகாரி அ.ர. ஸ்ரீதேவி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். தெற்கு ரத வீதி, கோயில் மேலவாசல் தெரு, வடக்கு ரத வீதி வழியாக தேர் முற்பகலில் நிலையத்தை அடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT