திருநெல்வேலி

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் மே 9இல் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

DIN


களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதியம்மன் திருக்கோயில் வைகாசித் தேரோட்ட திருவிழா  மே 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  மே 17ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 
இக்கோயில் வைகாசித் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.  நிகழாண்டு  வியாழக்கிழமை (மே 9) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன்  தொடங்குகிறது. விழா நாள்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். 
 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படி நடைபெறும்.  8ஆம் திருநாளான வியாழக்கிழமை(மே 16) பகல் 2 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளல்  நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்  வெள்ளிக்கிழமை (மே 17) மாலை 5 மணிக்கு நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT