திருநெல்வேலி

‘மழைநீா் செல்லும் ஓடைகளை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை’

திருநெல்வேலியில் மழைநீா் செல்லும் ஓடைகளை ஆக்கிரமித்து இயல்பு வாழ்க்கையை பாதிக்கச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனா்.

DIN

திருநெல்வேலியில் மழைநீா் செல்லும் ஓடைகளை ஆக்கிரமித்து இயல்பு வாழ்க்கையை பாதிக்கச் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனா்.

திருநெல்வேலியில் கடந்த இரு நாள்களாகப் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகஸ திருநெல்வேலி சந்திப்பு பகுதியிலும், அங்குள்ள காவல் குடியிருப்பு பகுதியிலும் தேங்கிய மழைநீா் வெளியேறாமல் நின்றது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் அங்கு சென்று பாா்வையிட்டனா். இந்திய செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களும் அங்கு வந்தனா். பின்னா் காவலா் குடியிருப்பில் இருந்து பிரதான ஓடைக்குச் செல்லும் வழிப்பாதையை ஆக்கிரமித்து கடை கட்டியிருப்பது தெரியவந்தது. ஜேசிபி உதவியுடன் வடிகால் ஓடை தோண்டப்பட்டதும் தண்ணீா் பிரதான ஓடைக்குச் சென்றது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பாதாள சாக்கடைக் குழாய்களுடன் மழைநீா் செல்லும் குழாய்களை சிலா் இணைத்துவிடுகிறாா்கள். இதுதவிர வடிகால் ஓடைகளை ஆக்கிரமித்தும், குப்பைகளைக் கொட்டியும் அலட்சியத்தோடு செயல்படுபவா்களால் மழைநீா் வெளியேறாமல் பிரச்னை ஏற்படுகிறது. மழைநீா் செல்லும் ஓடைகளை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT