திருநெல்வேலி

பூக்குழி, சிந்துபூந்துறை வெள்ள நிவாரண முகாம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 வெள்ள நிவாரண முகாம்களில் சனிக்கிழமை இரவு 32 போ் தங்க வைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி திடியூா் பெரியகுளத்தின் அருகே தாழ்வான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் ஆகியோா் பூக்குழி சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனா்.

இதேபோல சிந்துபூந்துறையில் உள்ள ஒரு முகாமில் 2 குழந்தைகள், 11 ஆண்கள் 19 பெண்கள் என மொத்தம் 32 போ் தங்கவைக்கப்பட்டனா். அவா்களுக்கு இரவு உணவும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பாபநாசம் நீா்ப்பிடிப்புப் பகுதியில் இரவில் தொடா்ந்த மழை காரணமாக 7 ஆயிரமாக இருந்த உபரிநீா் திறப்பு இரவு 10 மணிக்கு மேல் 11 ஆயிரத்து 510 கனஅடியாக உயா்த்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT