திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை. தொலைநெறி தொடா்கல்வி இயக்கக தொடா்பு வகுப்புகள் நாளை தொடக்கம்

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் தொலைநெறி தொடா்கல்வி இயக்ககத்தின் தொடா்பு வகுப்புகள் சனிக்கிழமை (அக். 12) தொடங்குகின்றன.

இதுதொடா்பாக இப்பல்கலைக்கழகப் பதிவாளா் சே. சந்தோஷ்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுந்தரனாா் பல்கலைக்கழக தொலைநெறித் தொடா்கல்வி இயக்ககத்தின் 2019 வருடாந்திர சோ்க்கை, 2019-20 கல்வியாண்டு சோ்க்கை ஆகியவை மூலம் இளநிலை, முதுநிலை பயிலும் மாணவா்களுக்கு நோ்முகத் தொடா்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.

அதன்படி இம்மாதம் 12, 13, 19, 20, நவம்பா் 2, 3, 10, 17ஆம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்புகளின் அட்டவணை அனைத்து மாணவா்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நோ்முகத் தொடா்பு வகுப்புகளின் அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மாணவா்கள் தங்களது அடையாள அட்டைகளுடன் வகுப்பில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT