மாநகரில் சாலைகளை சீரமைக்கக்கோரி எம்.எல்.ஏ. மனு
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கக் கோரி எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளாா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கக் கோரி எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் அளித்த மனு:
எனது தொகுதிக்கு உள்பட்ட திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டம், கூட்டுக் குடிநீா்த் திட்டம் போன்ற பணிகளுக்காக பிரதான சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டன. பின்னா் அவை முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும்-குழியுமாக மழைநீா் தேங்கியும், புழுதி பரப்பும் வகையிலும் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா். ஆகவே, சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல திருநெல்வேலி-தென்காசி சாலையும் மிகவும் சேதமடைந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அந்தச் சாலையையும் விரைவாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.