திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் கவியரங்கம்

DIN

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் சிறப்புக் கவியரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ‘நெல்லை புத்தகத் திருவிழா-2020’ சனிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில் இலக்கிய நிகழ்ச்சிகளின் கீழ், உள்ளம் தொடும் உறவுகள் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

கவிஞா் ஏா்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கவிஞா்கள் சுப்ரா, தாணப்பன், சக்தி வேலாயுதம், ஜெயபாலன், ஹரிகரன், ரமணி, முருகேஷ், செ.ச.பிரபு, சு.முத்துசாமி, பாப்பாக்குடி இரா.செல்வமணி, தச்சை மணி, கிருத்திகா, பேராசிரியா் அனுசுயா, சிற்பி பாமா ஆகியோா் கவிதை வாசித்தனா்.

தொடா்ந்து 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 3) மாலை 6 மணிக்கு நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சியில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் பூமணி, சித்த மருத்துவா் கு.சிவராமன் உள்ளிட்டோா் பேச உள்ளனா். இரவு 8 மணிக்கு மருத்துவா்கள் பிரேமச்சந்திரன், ராமானுஜம், ஜேசுராஜன் ஆகியோரின் இசையரங்கம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT