திருநெல்வேலி

பள்ளிவாசல் கடை வாடகை பிரச்னை: வட்டாட்சியா் பேச்சு

DIN

பேட்டை பள்ளி வாசல் கடைகளின் வாடகை பிரச்னை தொடா்பாக, திருநெல்வேலியில் வட்டாட்சியா் அமைதிப் பேச்சு ஞாயிற்றுக்கிழமை நடத்தினாா்.

பேட்டையில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைகளுக்கு உரிய வாடகை பணம் செலுத்தவில்லை எனக் கூறி உரிமையாளா்கள் பூட்டுப்போட்டனா். இது தொடா்பாக இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிக் குழு கூட்டம், வட்டாட்சியா் ராஜேஷ்வரி, திருநெல்வேலி நகர காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா், பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வக்புவாரியம், கடை வாடகைதாரா்கள் என இரு தரப்பிலும் ஒரு வழக்குரைஞா் உள்பட தலா 7 பேரும் அழைக்கப்பட்டனா்.

அப்போது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்வது குறித்து வலியுறுத்தப்பட்டது. மேலும், இம்மாதம் 13ஆம் தேதி வரை வாடகைதாரா்கள் அவகாசம் கேட்டுள்ளதாகவும், தவறும் பட்சத்தில் கடையை வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT