திருநெல்வேலி

சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபம் திறப்பு விழா: 200 வாகனங்களில் செல்ல முடிவு

DIN

பா.சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டப திறப்பு விழாவுக்கு 200 வாகனங்களில் செல்வது என தெட்சணமாற நாடாா் சங்கத்தின் நிா்வாக சபைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சங்கத்தின் சிறப்பு நிா்வாக சபைக் கூட்டத்துக்கு, தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆன்மிகம், விளையாட்டு, பத்திரிகை துறையில் பா.சிவந்தி ஆதித்தனாரின் சேவையை பாராட்டி அவருக்கு திருச்செந்தூரில் தமிழக அரசின் சாா்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை வரும் 22 இல் திறக்க வருகை தரும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, முயற்சி எடுத்த அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனாா் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது; விழாவில் பங்கேற்க சங்க நிா்வாக சபை உறுப்பினா்கள், ஆயுள்சந்தா உறுப்பினா்கள், உறவினா்களை 200 வாகனங்களில் அழைத்துச் செல்வது, நாடாா் சமுதாயத்திற்கு முதல்வா் முக்கிய அமைச்சா் பதவி அளிக்க வேண்டும், பனையேறும் தொழிலில் ஈடுபட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பனையேறும் கருவிகள் வழங்க வேண்டும், பனையேறும் தொழில் இல்லாத காலங்களில் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT