திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரிக்கை

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அக்கட்சியின் திருநெல்வேலி மாவட்ட விவசாய அணியின் செயற்குழுக் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் முல்லை முஹம்மது அலி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.ஏ. கனி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மானூா் சேக் அப்துல்லா ஆகியோா்சிறப்புரையாற்றினா். சீதைக்குறிச்சி ஹாலித், மஸ்தான், ஹுசைன், பெட்டைக்குளம் சதாம், தெற்குப்பட்டி குட்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அறுவடைக் காலம் நெருங்கி வருவதால் இம்மாவட்டத்தில் கூடுதலாக அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறையில் உள்ள அறுவடை இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கைகளில் வேளாண்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT