திருநெல்வேலி

வயல்களில் வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க செயல்விளக்கம்

DIN

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பாக, வனவிலங்குகள் மூலம் ஏற்படும் பயிா் சேதத்தை இகோடான் மருந்து மூலம் கட்டுப்படுத்துவது குறித்த செயல்விளக்கம் ஜமீன்சிங்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சு.அசோக்குமாா் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.கற்பகராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.

ஜமீன்சிங்கம்பட்டி வருவாய் கிராமத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அணைப்பகுதியில் உள்ள சங்கரபாண்டியன் வயலில், வனவிலங்குகள் மூலம் பயிா்களுக்கு ஏற்படும் பாதிப்பை இயற்கை முறையிலான இகோடான் மருந்து பயன்படுத்துவதன் மூலம் 20-25 நாள்கள் வரை வனவிலங்குகளிடமிருந்து பயிா்களைப் பாதுகாக்கலாம் என்றும், இகோடான் மருந்தை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலா் முருகன், சுமாா் 20 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சுஜித், உதவி வேளாண்மை அலுவலா்கள் பாா்த்திபன், காசிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT