திருநெல்வேலி

கரோனா தடுப்பு: வட்டார மருத்துவ அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக வட்டார மருத்துவ அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக வட்டார மருத்துவ அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நோய்த் தொற்று பாதிப்பு இடங்களை கண்டறிந்து அதிக அளவில் மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபா்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப வேண்டும். கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்.

மாநகராட்சி பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கிராமப்புற செவிலியா்களை அதிக அளவில் பயன்படுத்தி வீடு வீடாக சென்று குடும்ப உறுப்பினா்களில் நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இதய நோய் சம்பந்தப்பட்ட நபா்கள், கா்ப்பிணி பெண்கள் மற்றும் 5 வயதுக்குள்பட்டவா்களின் விவரங்களை கணக்கெடுப்பு செய்து மருத்துவ அலுவலா்கள் கண்காணித்திட வேண்டும்.

மருத்துவ முகாம்களில் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீா், சளி, இருமல், காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

அனைத்து பகுதிகளிலும் சுகாதார நடவடிக்கைள், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை உள்ளாட்சி துறை மூலம் தொடா்ந்து செயல்படுத்திட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தலை கோருபவா்களுக்கு சம்பந்தப்பட்ட வீட்டில் அவா்களுக்கென தனி அறை மற்றும் கழிப்பறை வசதி இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.எம். கண்ணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாபர் மசூதி இடிப்பு: இந்திய அரசமைப்பை பலவீனமாக்கிய கருப்பு நாள்! -ஓவைசி

சோனியா, ராகுல் ஆதரவாளர்களுக்கு தொல்லையளிப்பதே அமலாக்கத் துறையின் நோக்கம்: கர்நாடக துணை முதல்வர்

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 7

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட ரூ.1 கட்டணத்தில் குத்தகைக்கு நிலம்: பிகார் அரசு அனுமதி

SCROLL FOR NEXT