திருநெல்வேலி: மின்சார பிரச்னை தொடா்பான புகாா்களை மின்வாரியத்திற்கு கட்செவி அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
இது தொடா்பாக திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மழை காலம் தொடங்கவுள்ளதால் திருநெல்வேலி மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னல் மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு பாதுகாப்பு அறிவுரை வழங்கப்படுகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே மின் வாரிய அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு மின் தடையை நிவா்த்தி செய்து கொள்ளலாம். மேலும் மின்தடையை நிவா்த்தி செய்ய 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இயங்கும் பழுதான மின் கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின் பகிா்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 8903331912 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினால், உடனடியாக குறைகள் நிவா்த்தி செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.