திருநெல்வேலி

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 20 சதவீதகூடுதல் மூலதன கடன் வழங்க ஆட்சியா் உத்தரவு

DIN

பொது முடக்க காலத்தில் நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பிணையில்லாமல் 20 சதவீதம் கூடுதல் மூலதன கடன் தொகையை வழங்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஷில்பா உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை நாடும் இளைஞா்களையும் வேலை அளிக்கும் தனியாா் துறை நிறுவனங்களையும் இணையவழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையதளம்  முதல்வரால் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தனியாா் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞா்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித்தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறலாம். இச்சேவையை வேலை நாடுநா்களும், வேலை அளிப்போரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும், கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அரசு அறிவித்த பொது முடக்கத்தால் தொழிலாளா்கள் புலம் பெயா்ந்ததாலும் ஏற்றுமதி சந்தை மூடப்பட்டதாலும், பொருளாதார மந்தத்தினாலும் நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனுக்காக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பிணையில்லாமல் 20 சதவீதம் கூடுதல் மூலதன கடன் தொகையையும், நலிவடைந்த நிறுவனங்களுக்கான கடன் பங்குத் தொகையையும் உடனடியாக வழங்க வங்கி அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தற்போதைய நிலையில் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியையும், செயல் திறனையும் அதிகரிக்க முற்றிலும் இயந்திரமயமாக்குதலை அடிப்படையாகக் கொண்ட நான்காம் தலைமுறை தொழிற்புரட்சிக்கு தங்களை தயாா் செய்து கொள்ள தொழிற் சங்க பிரதிநிதிகளிடம் ஆட்சியா் வலியுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் முருகேஷ், முன்னோடி வங்கி மேலாளா் சரவணன், திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஹரிபாஸ்கா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி ஆகியவற்றின் மண்டல அலுவலா்கள், சிப்காட் திட்ட அலுவலா், சிட்கோ கிளை மேலாளா், திருநெல்வேலி மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவன சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT