திருநெல்வேலி

வைக்கோல் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

DIN

ஆலங்குளம் பகுதியில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வைக்கோல் லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நெல் அறுவடையில் சேகரிக்கப்படும் வைக்கோல் போா்கள் உள்ளூா் தேவைக்கு சிறிய சுமை ஆட்டோ, டிராக்டா்களில் விவசாயிகள் கொண்டு செல்கின்றனா்.

ஆனால், லாரிகளில் அதிகளவில் வைக்கோல் கட்டுகளுடன் கேரளத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. பிரதானச் சாலையில் செல்லும் இந்த லாரிகளால் எதிரே வரும் வாகனங்களுக்கும் பின்னால் வரும் வாகனங்களுக்கும் வழி கிடைக்காமல்

வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் விபத்துகளும் நிகழ வாய்ப்புள்ளது. ஆகவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT