திருநெல்வேலி

ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டம்

DIN

திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டுநா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தரப்பினருக்கும் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநா்களைப் பாதிக்கும் செயலைக் கைவிட வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காக்க தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆட்சியா் அலுவலகம் முன் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கப் பொதுச்செயலா் ஆா். முருகன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் காமராஜ், மாவட்டச் செயலா் மோகன், பொருளாளா் பெருமாள் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் ஜோதி, வரகுணன், வண்ணமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறியது: மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் ஆட்டோ ஓட்டுநா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். நலவாரியத்தில் பலா் பதிவு செய்யாமல் ஆட்டோ ஓட்டிவருகின்றனா். ஆட்டோ ஓட்டுா்கள் மூலம் நலவாரியத்துக்கு ஆண்டுதோறும் காப்பீடு, அபராதம் உள்ளிட்ட பல வழிகளில் கணிசமான தொகை கிடைத்துவரும் சூழலில், இப்போது நிவாரணம் அளிக்க போதுமான நிதி நலவாரியத்தில் உள்ளது. ஆகவே, ஆட்டோக்களை இயக்க அனுமதிக்கவும், நிவாரணம் அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT