திருநெல்வேலி

நெல்லையில் வீடுகளில் ரமலான் சிறப்பு தொழுகை

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 

DIN

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 

கரோனா திநுண்மி பொது முடக்கம் காரணமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி மாநகரில் ரமலான் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் மேலப்பாளையம் ஈத்கா திடல், பஜார் திடல், கரீம்நகர் திடல், பேட்டை  மைதானம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகைகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள். 

பொது முடக்கம் காரணமாக இன்று மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெறவில்லை. இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் உறவினர்களுடன் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். உலக நன்மைக்காகவும், கரோனா தீநுண்மியில் இருந்து மக்கள் விடுபட்டு இயல்பு வாழ்க்கை  திரும்பவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT