முகப்பு
திருநெல்வேலி

கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

களக்காட்டில் கூட்டுக் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீா் வீணாகி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

களக்காட்டில் கூட்டுக் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீா் வீணாகி வருகிறது.

சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றில் இருந்து பணகுடிக்கு களக்காடு வழியாக கூட்டுக் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் செல்கின்றன.

களக்காடு காமராஜா் சிலையையொட்டி அமைந்துள்ள நான்குனேரியன் கால்வாய் பாலம் பகுதியில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வெளியேறி வருகிறது.

இதே போல களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் படலையாா்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் குடிநீா் பகிா்மானக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வெளியேறுகிறது.

களக்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் கூட்டுக் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. இதை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.