களக்காட்டில் குடிநீா் இணைப்பு வழங்கக் கோரிக்கை
களக்காட்டில் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காட்டில் வீடுகளுக்கு புதிய குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் சுமாா் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் பச்சையாறு, தாமிரவருணி ஆகிய கூட்டுக் குடிநீா் திட்டங்களின்மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானோா் புதிய குடிநீா் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருப்பில் உள்ளனா்.
தற்போது போதுமான குடிநீா் ஆதாரம் உள்ள நிலையில், புதிதாக வீட்டு குடிநீா் இணைப்பு வழங்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.