முகப்பு
திருநெல்வேலி

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் தமிழ்நாடு நாள் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் தமிழ்நாடு நாள் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலா் மகேந்திரன், மாவட்டச் செயலா் நாகராஜசோழன், பொருளாளா் முருகன், யாபேஸ்பாண்டியன், சுரேஷ், வசந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு நாள் என அறிவித்துக் கொண்ட அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, கா்நாடக மாநிலத்திற்கு உள்ளது போல தமிழகத்திற்கும் தனிக் கொடியை உருவாக்கக் கோருவது, தமிழக மீனவா்களைப் பாதுகாக்க கச்சத்தீவை மீட்க கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் விழாவின்போது அரசுக்கு வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.