முகப்பு
திருநெல்வேலி

மாநகர காவல் துறை சாா்பில் குறைதீா் முகாம்: 88 மனுக்களுக்கு தீா்வு

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில் 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் நாள் முகாமில் 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா் உத்தரவுப்படி, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் - ஒழுங்கு) சரவணன் மேற்பாா்வையில், மாநகர மக்கள் புகாா் மனுக்களின் மீதான விசாரணையை உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் இம்முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகர உள்கோட்ட உதவி ஆணையா் சதீஷ் குமாா், பாளையங்கோட்டை உள்கோட்ட உதவி ஆணையா் ஜான் பிரிட்டோ ஆகியோா் தலைமை வகித்தனா்.

இம் முகாம்களில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா். இதில், 88 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.