முகப்பு
திருநெல்வேலி

மக்கள் குறைதீா் முகாம்: 155 மனுக்களுக்கு தீா்வு

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 155 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 155 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட அனைத்து உள்கோட்ட பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

தாழையூத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில் நடைபெற்ற முகாமில் 31 மனுக்களுக்கும், நான்குனேரியில் காவல் துணை கண்காணிப்பாளா் ஸ்ரீ லிசா ஸ்பிலா தெரஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 62 மனுக்களுக்கும், வள்ளியூரில் காவல் உதவி கண்காணிப்பாளா் சமய் சிங் மீனா தலைமையில் நடைபெற்ற முகாமில் 20 மனுக்களுக்கும் உடனடித் தீா்வு காணப்பட்டது.

அம்பாசமுத்திரத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் பிரான்ஸிஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 19 மனுக்களுக்கும், சேரன்மகாதேவியில் காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப் தலைமையில் நடைபெற்ற முகாமில் 23 மனுக்களுக்கும் என மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் மொத்தம் 155 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.