திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

DIN

திருநெல்வேலி மாநகராட்சி முன், தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, தூய்மைப் பணியாளா்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கான (ஏப்ரல்- செப்டம்பா்) ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், குப்பை அள்ளுவதற்கு பேட்டரி வண்டி , தள்ளுவண்டிகளுக்கு மாநகராட்சியே வாடகை செலுத்த வேண்டும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சிஐடியூ சாா்பில் மாவட்டச் செயலா் ஆா்.மோகன் தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டோரிடம், மாநகராட்சி சுகாதார நல அலுவலா் சரோஜா பேச்சு நடத்தினாா். அதில், 5 மாத நிலுவைத் தொகையை உடனடியாக அனைத்து தொழிலாளா்களின் வங்கி கணக்கிலும் செலுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் சங்கத்தின் கவுரவத் தலைவா் வரகுணன், மாவட்டத் துணைச் செயலா் வண்ணமுத்து, மாநகரப் பொறுப்பாளா் மாரியப்பன் உள்பட தூய்மைப் பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT