திருநெல்வேலி

என்.ஜி.ஓ. பி காலனி சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கக் கோரிக்கை

DIN

திருநெல்வேலி வேய்ந்தான்குளம் அருகே என்.ஜி.ஓ. பி காலனி சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே என்.ஜி.ஓ. பி காலனி சந்திப்பு உள்ளது. நாகா்கோவிலில் இருந்து வரும் வாகனங்கள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேலப்பாளையம் மற்றும் வண்ணாா்பேட்டை மாா்க்கத்தில் செல்லும் வாகனங்கள், திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்தச் சந்திப்பு வழியாகவே செல்கின்றன. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தச் சந்திப்பில் செல்கின்றன. ஆனால், இங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்த ரமேஷ் கூறியது: வருங்கால வைப்புநிதி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்பட ஏராளமான அரசு அலுவலகங்கள் என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ளன. இங்கு வரும் வாகனங்கள், புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் இந்தச் சந்திப்பைக் கடந்து செல்கின்றன. சிக்னல் இல்லாததால் பெரும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து மாநகர காவல் துறையினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமுடக்க தளா்வுக்கு பின்பு வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதால் விபத்துகளும் அதிகரித்துள்ளன. ஆகவே, இங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்கவும், போக்குவரத்து காவலரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT