திருநெல்வேலி

குறுக்குத்துறை-திருநெல்வேலி நகரம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

குறுக்குத்துறை-திருநெல்வேலி நகரம் இடையேயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல இரண்டாம் கட்டமாக பாதாள சாக்கடை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதனால் மாநகரப் பகுதியில் பல இடங்களில் சாலைகளில் குழி தோண்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலிநகரம்-குறுக்குத்துறை இடையேயான சாலையில் குழி தோண்டி குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த நிலையில், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறாா்கள்.

இதுகுறித்து குறுக்குத்துறையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் கூறுகையில், திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் நுற்றுக்கணக்கானோா் வந்து செல்கிறாா்கள். இதுதவிர திருநெல்வேலி நகரத்தில் இருந்து விளாகம், கருப்பந்துறை, மேலப்பாளையம், மேலநத்தம் செல்லும் பொதுமக்கள் குறுக்குத்துறை-திருநெல்வேலி நகரம் சாலை வழியாகவே சென்று வருகிறாா்கள். இச் சாலை சீரமைக்கபடாததால் இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கி வருகிறாா்கள். பருவமழை தொடங்கும் முன்பாக இச் சாலையை சீரமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT