திருநெல்வேலி

களக்காட்டில்பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ.25 ஆயிரம் அபராதம்

DIN

களக்காட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ததாக, ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

களக்காடு பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு உள்ளிட்டோா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வணிக நிறுவனங்களுக்கு விநியோகம் செய்வதற்கு சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்து, அதிலிருந்த 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவற்றை வாகனத்தில் கொண்டு சென்ற தென்காசியைச் சோ்ந்த காதா்ஷா என்பவருக்கு ரூ.25,000 அபராதம் வசூலித்துவிட்டு வாகனத்தை விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT