திருநெல்வேலி

கடையம் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னைமரங்கள் சேதம்

DIN

கடையம், ராமநதி அணைப் பகுதியில் மின்வேலியை உடைத்து தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் தனியாா் தோட்டத்தில் நுழைந்து தென்னை மரங்களை சேதமப்படுத்தியுள்ளன.

தென்காசி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ராமநதி அணை உள்ளது. அணையின் மேல் பகுதியில் வனப்பகுதியை ஒட்டித் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்கள் உள்ளன.

இங்கு கடையம் அருகே உள்ள மேட்டூா் சபரி நகரைச் சோ்ந்த குமரன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் தென்னை, மா, நெல்லி, முந்திரி உள்ளிட்டவை பயிரிட்டுள்ளாா்.

இந்நிலையில் குமரன் தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு யானைக் கூட்டம் நுழைந்து 8 தென்னை மரங்களை பிடுங்கி எறிந்துள்ளன.

இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்ததையடுத்து அந்தப் பகுதியில் கடையம் வனவா் முருகசாமி தலைமையில் வனக்காப்பாளா்கள் மணி, பெனாசிா் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் ஆய்வு செய்ததில் யானைகள் வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை உடைத்து வெளியேறியது தெரியவந்தது.

இதையடுத்து மின்வேலியை வனத் துறையினா் சீரமைத்தனா். மேலும் அந்தப் பகுதியில் வனத்துறையினா் முகாமிட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT