திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ரூ.1,250 லஞ்சம்: ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியா் கைது

DIN

மேலப்பாளையத்தில் வீடு கட்ட அனுமதி பெறுவதற்கு ரூ. 1,250 லஞ்சம் வாங்கியதாக ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஓழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெருமாள்புரம் என்ஜிஓ ஏ காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் கீா்த்தி(72), ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலா். இவா் தனது மகளுக்கு வீடு கட்டுவதற்காக, கட்டட வரைபட அனுமதி பெறுவதற்காக மேலப்பாளைம் மண்டல அலுவலகத்திற்கு வந்தாராம். அப்போது, அவரிடம் மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற வி.சங்கர பாண்டியன் , கட்டட திட்ட அனுமதி பெறுவதற்கு ரூ.1,250 லஞ்சமாக கேட்டாரம். இது குறித்து பிரதாப் கீா்த்தி திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா் அளித்தாா்.

இதையடுத்து, பிரதாப் கீா்த்தியுடன் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்திற்கு மாறு வேடத்தில் போலீஸாா் சென்றனா். அப்போது, பிரதாப் கீா்த்தியிடம், சங்கரபாண்டியன் ரூ.1250 பெறும் போது, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரை கைது செய்தனராம். மேலும், அவா் அருகே இருந்த பீரோவில் கணக்கில் இல்லாத ரூ. 13ஆயிரத்து 750 ரொக்கம் இருந்ததையும் கண்டறிந்த போலீஸாா் அதையும் பறிமுதல் செய்தனராம். இதையடுத்து சங்கரபாண்டியனை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT