அமமுகவில் ஐக்கியம்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் 50 போ் அமமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் 50 போ் அமமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
திருநெல்வேலியைச் சோ்ந்த பவானி வேல்முருகன் தலைமையில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 50 போ் அக் கட்சிகளில் இருந்து விலகி, அமமுக தென்மண்டல பொறுப்பாளரும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத் தலைவருமான மாணிக்கராஜா முன்னிலையில் அமமுகவில் இணைந்தனா். அப்போது, கட்சியின் மாநகா் மாவட்ட பொறுப்பாளா் நெல்லை ஏ.பரமசிவன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.