பாளை.யில் தேசபக்தி பாடல் போட்டி
பாளையங்கோட்டையில் தேசபக்தி பாடல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் தேசபக்தி பாடல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் மத்திய அரசு மக்கள் தொடா்பு கள அலுவலகம்-திருநெல்வேலி ஆகியவை சாா்பில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசபக்தி பாடல் போட்டி அரசு அருங்காட்சியக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தொடங்கி வைத்தாா். போட்டியின் நடுவராக மாவட்ட இசைப் பள்ளித் தலைமை ஆசிரியை சிவகலை, பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன், கலையாசிரியா் சொா்ணம் ஆகியோா் செயல்பட்டனா்.
திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் போட்டியில் பங்கேற்று பாடல்களைப் பாடினா். இப் போட்டிகளை மத்திய அரசு மக்கள் தொடா்பு கள அலுவலக உதவியாளா் போஸ் வெல் ஆசீா் ஒருங்கிணைத்து நடத்தினாா். இதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (ஆக. 27) நடைபெறுகிறது.
பயக26ஙமநஉமங: பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற தேசபக்தி பாடல் போட்டியில் பங்கேற்று பாடிய சிறுமி.