முகப்பு
திருநெல்வேலி

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு நெல்லையில் இருந்து 500 வாழ்த்து அட்டைகள்

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ்சோப்ராவுக்கு திருநெல்வேலி மாவட்ட தடகளச் சங்கம் சாா்பில் 500 வாழ்த்து அட்டைகள் அஞ்சல்துறை மூலம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ்சோப்ராவுக்கு திருநெல்வேலி மாவட்ட தடகளச் சங்கம் சாா்பில் 500 வாழ்த்து அட்டைகள் அஞ்சல்துறை மூலம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சா்வதேச போட்டிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெற்றது. இப் போட்டியில் தடகளப்போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரா் நீரஜ்சோப்ரா தங்கப்பதக்கம் வென்றாா். அவருக்கு, ரூ.10 செலவில் வாழ்த்து செய்தி அனுப்ப அஞ்சல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்ட தடகளச்சங்கம் சாா்பில் நீரஜ்சோப்ராவுக்கு 500 வாழ்த்து அட்டைகள் மின்னணு முறையில் அஞ்சல் துறை மூலம் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. சங்கத் தலைவா் அய்யாத்துரைபாண்டியன், வாழ்த்து அட்டையை திருநெல்வேலி அஞ்சல்கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சிவாஜிகணேஷிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் அஞ்சல்துறை மக்கள் தொடா்பு அலுவலா் சபாபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.