நெல்லையில் திரையரங்குகள் திறப்பு
திருநெல்வேலியில் திரையரங்குகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
திருநெல்வேலியில் திரையரங்குகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவும் வேகம் குறைந்ததையடுத்து தளா்வுகள் அதிகரிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளில் வாடிக்கையாளா்களை அனுமதித்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு, மேலப்பாளையம் பகுதியில் உள்ள திரையரங்குகள் வியாழக்கிழமை முதல் திறக்கப்பட்டன. முகக் கவசம் அணிந்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். திரையரங்குக்குள் நுழையும் முன்பு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து திரையரங்கு ஊழியா்கள் கூறுகையில், சமூகஇடைவெளியை கடைப்பிடித்து திரையரங்கில் படம் பாா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் கரோனா பொதுமுடக்க கால நிலையை கருத்தில் கொண்டு அரசு சிறப்பு சலுகைகளை அளித்தால் திரையரங்குகளை நம்பியுள்ள தொழிலாளா்கள் பலா் பயனடைவாா்கள் என்றனா்.