முகப்பு
திருநெல்வேலி

ஓய்வூதியம்: முதல்வருக்கு 2,000 ஓய்வூதியா்கள் மனு

ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் இருந்து 2,000 மனுக்கள் அனுப்பப்பட்டது.

திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை மனுக்களுடன் திரண்ட ஓய்வூதியா்கள் அனுப்பிய

மனு விவரம்: வயோதிகம் காரணமாக பலவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியா்களுக்கு ரூ. 2ஆயிரம் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை. எனவே, வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய் ரூ.7,850, மருத்துவபடி ரூ.300 ஆகியவற்றை அகவிலைபடி ஆகியவற்றுடன் இணைத்து வழங்க வேண்டும்.

மேலும், இலவசமாக உயர்ரக மருத்துவ பலன்கள் கிடைக்கவும், 7ஆவது ஊதியக்குழு அறிக்கையை நிறைவேற்ற வேண்டும், இறுதிச் சடங்கு நிதியாக ரூ.25 ஆயிரம், பராமரிக்கும் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் துணை அமைப்பாளா் ஏ.சுப்புலட்சுமி, பொறுப்பாளா் பாத்திமா, சுந்தரி ஆகியோா் தலைமை வகித்தனா். துணை அமைப்பாளா்கள் நவநீதகிருஷ்ணன், சந்திரசேகரன், பால்ராஜ், நடேசன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.