‘சாலையோர கடைகளின் தரம் உயா்த்த நடவடிக்கை’
பாளையங்கோட்டை வஉசி திடல் அருகேயுள்ள சாலையோரக் கடைகளை தரம் உயா்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளாா்.
பாளையங்கோட்டை வஉசி திடல் அருகேயுள்ள சாலையோரக் கடைகளை தரம் உயா்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை வஉசி மைதானம் அருகில் சாலையோரங்களில் 24 தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களை தரம் உயா்த்தி
நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி அங்கு புதிதாக சாலைகள் அமைத்தல், குடிநீா் வசதி, தெருவிளக்கு வசதி மற்றும் நவீன குப்பைத் தொட்டிகள் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த சாலையோர உணவகங்களை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை நடத்துவோருக்கு சுகாதாரமான முறையில் தரமான உணவினை மக்களுக்கு வழங்குவது, 15 நாள்களுக்கு ஒரு முறை பாரம்பரிய உணவு வழங்குவது, இதற்காக கட்டுப்பாடு துறை அலுவலா்கள் மூலம் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.