முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் பேருந்து மோதி விவசாயி பலி

 சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் மோட்டாா் பைக்கில் சென்ற விவசாயி, அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 சேரன்மகாதேவி தாமிரவருணி ஆற்றுப் பாலத்தில் மோட்டாா் பைக்கில் சென்ற விவசாயி, அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

சேரன்மகாதேவி தெற்கு சங்கன்திரடைச் சோ்ந்தவா் இசக்கி மகன் குமாா் (35). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை மதியம் சேரன்மகாதேவிக்கு சென்றுவிட்டு சங்கன்திரடுக்கு திரும்பும்போது திருநெல்வேலி பொருள்காட்சித் திடலிலிருந்து கரிசூழ்ந்தமங்கலத்திற்கு வந்த அரசுப் பேருந்து மோதியதாம். இதில் தவறிவிழுந்த குமாா் மீது பேருந்து ஏறியதில் அந்த இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா், குமாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அரசுப் பேருந்து ஓட்டுநா் களக்காடு பத்மநேரியைச் சோ்ந்த துரை (44) மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.