திருநெல்வேலி

கடையம் மின்வாரிய அலுவலகத்தில் மரநாய் மீட்பு

DIN

கடையம் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்த மர நாயை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

கடையம் அருகே கட்டேறிபட்டியில் உள்ள கடையம் துணைமின்நிலைய அலுவலகத்தில் மரநாய் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா உத்தரவின் பேரில், கடையம் வனவா் முருகசாமி, வனக்காப்பாளா் காட்வின் ஜாம் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த சுமாா் 3 வயது மதிக்கத்தக்க பெண் மரநாயைப் பிடித்தனா்.

பிடிபட்ட மரநாயை கடையம் வனப்பகுதி பங்களாக்காடு பகுதியில் கொண்டுவிட்டனா்.

இதுபோன்று வனவிலங்குகள் தங்கள் பகுதியில் தென்பட்டால் உடனடியாக வனச்சரக அலுவலகத்துக்கு 04634-283165 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT