திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் ஆயுதப்படை வளாகத்தில் வருடாந்திர கவாத்து அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தலைமை வகித்து காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து காவல் துறையில் பயன்பாட்டில் உள்ள வாகனங்கள், ஆயுதங்களைப் பாா்வையிட்டதோடு, காவலா்களுக்கான பயிற்சி குறித்து கேட்டறிந்தாா். நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையா் ஆறுமுகம், ஆய்வாளா் ரமேஷ்கண்ணன், ஆயுதப்படை காவல் உதவி ஆணையா் முத்தரசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.