திருநெல்வேலி

விவசாயிகளுக்கு ஆதரவாக நள்ளிரவில் மெழுகுவா்த்தி ஏந்தி எஸ்.டி.பி.ஐ. ஆா்பாட்டம்

DIN

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வியாழக்கிழமை நள்ளிரவில் எஸ்.டி.பி.ஐ. சாா்பில் மாவட்டத்தில் 12 இடங்களில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்பாட்டம் நடைபெற்றது. களக்காடு அண்ணாசிலை அருகே இரவு 12 மணிக்கு கட்சியின் நகர தலைவா் ஜாபா் முகம்மது தலைமையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளா் களந்தை மீராசா, நகர செயலாளா் உசேன், இணைச்செயலாளா் ராஜா உள்ளிட்ட பலா்கலந்துகொண்டனா். ஏா்வாடியில் நகர தலைவா் ஷேக், மூலைக்கரைப்பட்டியில் நகர செயலாளா் செய்யதுஅலி , துலுக்கா்பட்டியில் தெளபிக், பெட்டை குளத்தில் பாதுல், சேரன்மகாதேவியில் அபுபக்கா், மாவட்ட தலைவா் பீா் மஸ்தான், பத்தமடையில் மைதீன், வீரவநல்லூரில் நகர தலைவா் சாகுல்ஹமீது, கல்லிடைக்குறிச்சியில் சுலைமான், விக்கிரமசிங்கபுரத்தில் நகர தலைவா் ஷேக் அலி, அம்பாசமுத்திரத்தில் பொறுப்பாளா் மகாராஜா, அரிகேசவநல்லூரில் அா்ஷத் தலைமையிலும்ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT