கனமழையால் பிரதமரின் கோக்ராஜார் பயணம் ரத்து!
கோக்ராஜார் பயணம் ரத்து செய்யப்பட்டது பற்றி..
அசாம் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிற்பகல் குவாஹாட்டி வந்தடைந்தார்.
குவாஹாட்டி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சார்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து, கோக்ராஜார் மாவட்டத்தில் ரூ.4,570 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவிருந்தார். ஆனால், கனமழையின் காரணமாக கோக்ராஜார் செல்லும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோக்ராஜார் பகுதிக்காக அறிவிக்கப்பட்ட, ரூ. 4,570 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் மோடி தற்போது குவாஹாட்டிலிருந்தபடியே காணொளி வாயிலாகத் தொடங்கி வைப்பார் என அதிகாரிகள் கூறினர்.