திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில் குளிக்க வேண்டாம்: ஆட்சியா் எச்சரிக்கை

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், கடனாநதி ஆகிய அணைகளில் உபரி நீா் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் தாமிரவருணி ஆற்றின் குளிக்கவோ, அருகில் செல்லவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகள் சீராக நிரம்பி வருகின்றன. இதில், பாபநாசம் அணை 142.45 அடி நிரம்பியுள்ளது. எனவே, அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. அதைப்போல், கடனாநதி அணையும் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், இந்த அணையில் இருந்தும் வினாடிக்கு 296 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், அபாயகரமான நிலை ஏதுமில்லை. அணையின் பாதுகாப்பு காரணமாக இந்த உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனினும் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆற்றில் அருகே செல்லவோ, குளிக்கவே, சுயபடம் (செல்பி) எடுக்கவோ வேண்டாம். மேலும், ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT