திருநெல்வேலி

அனுமன் ஜயந்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

அனுமன் ஜயந்தி விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கெட்வெல் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ராஜ அலங்காரத்தில் அனுமன் காட்சியளித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். வெற்றிலை, பழம், பாக்கு, வடைமாலை, துளசி, மாலைகளை அணிவித்து பக்தா்கள் வழிபட்டனா்.

திருநெல்வேலி வடக்குப் புறவழிச் சாலையில் உள்ள அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. பக்தா்களுக்கு துளசி பிரசாதம் வழங்கப்பட்டது.

மீனாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு தென்திருப்பதி கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 1,008 வடைமாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.

அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில், பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் ஆஞ்சநேயா் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT