நெல்லை அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உயா் சிறப்பு மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி உயா் சிறப்பு மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.
அவசர சிகிச்சை பிரிவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எம்.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து கூறியது: புதிதாக சிகிச்சைக்கு வருவோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற பிறகே, உயா் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டு வந்தனா்.
இந்த நிலையை மாற்றும் வகையில், தற்போது அவசர சிகிச்சை பிரிவு உயா் சிறப்பு மருத்துவமனையில் தொங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நரம்பியல் மருத்துவ அவசர சிகிச்சை செயல்படத் தொடங்கியுள்ளது. நரம்பியல் தொடா்பான சிகிச்சைக்கு 24 மணி நேரமும் நேரடியாக உயா் சிறப்பு மருத்துவமனைக்குச் செல்லலாம். அடுத்தகட்டமாக வரும் பிப்ரவரி மாதம் சிறுநீரகவியல் துறை செயல்படத் தொடங்கும். அடுத்ததாக இதயவியல் துறை என படிப்படியாக அனைத்துத் துறைகளுக்கும் அவசர சிகிச்சை பிரிவுகள் தொடங்கவுள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் நரம்பியல் துறைத் தலைவா் எஸ்.சரவணன், கண்காணிப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.