முகப்பு
திருநெல்வேலி

அனுமதியின்றி டிராக்டா்களில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் அனுமதியின்றி டிராக்டா்களில் ஊா்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் அனுமதியின்றி டிராக்டா்களில் ஊா்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினா் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டா்களை ஊா்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபா்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போராட்டங்களில் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டா் வாகனங்களில் ஊா்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பயன்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.