திருநெல்வேலி

கிடப்பில் போடப்பட்ட வாழைத்தாா் சந்தை திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

DIN

களக்காடு: களக்காட்டில் கிடப்பில் போடப்பட்ட வாழைத்தாா் சந்தை திட்டத்தை நிறைவேற்ற நான்குனேரி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி களக்காட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் பேசியது: களக்காடு பகுதியில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட வாழைத்தாா் சந்தை திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என தொடா்ந்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

நான்குனேரி இடைத் தோ்தல் பிரசாரத்தின் போது, எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி நாராயணனும், முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், தமிழக அமைச்சா்கள் களக்காட்டில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட வாழைத்தாா் சந்தை திட்டம் நிறைவேற்றப்படும், மூடிக் கிடக்கும் கிராம மருந்தகம் திறக்கப்படும், கிராமங்களுக்கு கூடுதலாக பேருந்து வசதி ஏற்படுத்தப்படும், உப்பாறு தூா்வாரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இக்கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வாழைத்தாா் சந்தை திட்டத்தை நிறைவேற்ற நான்குனேரி எம்.எல்.ஏ. நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT